Pyramid story in Tamil

கிசாவின் பெரிய பிரமீடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தி பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், எரிமலைப்பாறை, கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )

No comments

Powered by Blogger.